×

துபாய் டென்னிஸ் சாம்பியன் ஷிப்: அரையிறுதியில் ஹாலெப், மார்கெட்டா

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மகளிருக்கான துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-4, 6-3 என துனிசியாவின் ஓனஸ் ஜாபூரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா 6-2, 5-7, 6-4 என சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேனையும், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ 5-7, 7-5, 7-6 என செக்குடியரசின் பெட்ரோ கிவிட்டோவாவையும் வீழ்த்தினர். இன்று அரையிறுதியில் ஹாலெப்-ஆஸ்டாபென்கோ, மார்கெட்டா வோண்ட்ரூசோவா -வெரோனிகா குடெர்மெடோவா மோதுகின்றனர்.



Tags : Dubai Tennis Championship ,Halep ,Marquette , Dubai, Tennis, Championship, Halep, Marquette
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் ஹாலெப்பை வீழ்த்தினார் படோசா